திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 13 செப்டம்பர் 2017 (22:21 IST)

பர்சனல் அசிஸ்டெண்டை கற்பழித்த தொழிலதிபருக்கு ரூ.896 கோடி அபராதமா?

சீனாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் அவருடைய பர்சனல் அசிஸ்டெண்ட் ஆக பணிபுரிந்த 26 வயது பெண் ஒருவரை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்காக அந்த பெண் தொழிலதிபர் மீது ரூ.896 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்பதிவு செய்துள்ளார்



 
 
சீன தொழிலதிபர் கியோ வெங்குவாய் என்ற கோடீஸ்வர தொழிலதிபருக்கு கடந்த சில ஆண்டுகளாக 26 வயது பெண் ஒருவர் பர்சனல் அசிஸ்டெண்ட் ஆக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இருவரும் தொழில்சம்பந்தமான ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் நகரம் சென்றனர்.
 
அப்போது தொழிலதிபர் கியோ வெங்குவாய் தனது பர்சனல் அசிஸ்டெண்ட் பெண்ணை பாலியல் ரீதியாகவும், மனரீதியாகவும், தொல்லைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. சீனா திரும்பியவுடன் அந்த பெண், தொழிலதிபர் மீது $140 மில்லியன் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இது இந்திய மதிப்பில் ரூ.896 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு இன்னும் ஒருசில வாரங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தொழிலதிபருக்கு இந்த தொகை அபராதம் விதிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்