Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்திய சந்தையில் மோதிக்கொள்ளும் சீன நிறுவனங்கள்!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 11 செப்டம்பர் 2017 (19:56 IST)
ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக இது உள்ளது.

 
 
தற்போது இந்திய சந்தையில் தவிர்க்க முடியாத இடத்தை சியோமி பிடித்துள்ளது. இதுவரை 2.5 மில்லியன் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
 
இந்நிலையில், சியோமி நிறுவனத்திர் போட்டியாக ஐவூமி (iVoomi) என்ற புதிய ஸ்மார்ட்போன் நிறுவனம் மலிவு விலை மொபைல்களுடன் இந்தியாவில் அதிரடியாக களமிறங்கியுள்ளது.
 
குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்தவதே நோக்கம் என்று ஐவூமி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இதனால், இந்திய சந்தையில் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் விற்பனை செய்த சியோமிக்கு இது போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
 
புதிய நிருவனமான ஐவூமி தரத்தில் சமரசம் செய்யாமல் இருந்தால், சியோமி ரெட்மி ராஜ்ஜியத்துக்கு முடிவுகட்ட முடியும் என கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :