விரைவில் பெட்ரோல் டீசல் வாகன விற்பனைக்கு தடை!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 11 செப்டம்பர் 2017 (18:25 IST)
காற்று மாசுபாடை குறைக்க சீனாவில் முதல் கட்டமாக அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் தடை செய்யப்பட உள்ளன.

 
 
காற்றில் கார்பன் டை ஆக்சைடு அதிக அளவில் கலப்பதால் மாசு ஏற்படுகிரது. இது சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 
 
எனவே, அதை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சியில் உள்ளன. அதிக அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனாவும் ஒன்று. 
 
எனவே, சீனாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் தடை செய்யப்பட்டு எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் கடந்த ஜூலை மாதம் இத்தகைய அறிவிப்புகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :