23 வயது இளைஞனால் கர்ப்பமான 10 வயது சிறுமி!

23 வயது இளைஞனால் கர்ப்பமான 10 வயது சிறுமி!


Caston| Last Modified சனி, 12 ஆகஸ்ட் 2017 (16:06 IST)
அர்ஜெண்டீனாவில் 23 வயது இளைஞன் ஒருவனால் 10 வயது சிறுமி பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் அந்த சிறுமிக்கு தான் கர்ப்பமாக இருப்பது 8 மாதங்கள் ஆன பின்னரே தெரிந்துள்ளது.

 
 
குறிப்பிட்ட அந்த சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக தனது தாயிடம் கூறியுள்ளார். உடனே அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியை சோதித்ததில் சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததையடுத்து அதிர்ச்சியில் உறைந்தனர்.
 
இதனையடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுமி தான் கர்ப்பமாக இருப்பதை உணரவில்லை. சிறுமி உடல் பருமனாக இருப்பதால் அவர் 8 மாதம் கர்ப்பமாக இருந்ததை மற்றவர்களும் உணரவில்லை. நீதிமன்றத்தில் இந்த வழக்கு தற்போது உள்ளது.
 
விசாரணையில் சிறுமியின் வீட்டில் சில மாதங்களுக்கு முன்னர் தங்கியிருந்த 23 வயது உறவினர் சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்ததும் அதன் காரணமாக சிறுமி கர்ப்பமானதும் தெரிய வந்தது. இதனையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :