Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகிஸ்தான்: நவாஸ் ஷெரீப் பாதுகாப்பு வாகனம் மோதி 12 வயது சிறுவன் பலி


sivalingam| Last Modified சனி, 12 ஆகஸ்ட் 2017 (00:31 IST)
பாகிஸ்தானில் சமீபத்தில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நவாஸ் ஷெரீப் அவர்கள் லாகூரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காருக்கு பின்னால் பாதுகாப்பு வாகனங்கள் சென்று கொண்டிருந்தன


 
 
இந்த நிலையில்  வேகமாக வந்த பாதுகாப்பு வாகனங்களில் ஒன்று 12 வயது சிறுவன் ஒருவனை இடித்துவிட்டு சென்றுவிட்டது. இதனால் பலத்த காயமடைந்த அந்த சிறுவன், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மரணம் அடைந்தான்.
 
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவரது தந்தை, தனது கண்முன்னே மகனுக்கு நேர்ந்த கொடுமை பார்த்து அதிர்ச்சி அடைந்து மயக்கமுற்றார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதுகுறித்து நவாஸ் ஷெரீப் கட்சியினர் சிறுவனின் குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :