Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மருத்துவ குணம் நிறைந்த சீரகக் குழம்பு செய்ய...!

Sasikala|
தேவையானவை:
 
சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்
புளி - ஒரு எலுமிச்சை அளவு  
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 5  அல்லது 6 பல்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -  கால் டீஸ்பூன்
வெல்லம் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
கடுகு  - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
 
செய்முறை:
 
ஒரு கடாயில் எண்ணெய் விடாமல் சீரகத்தை வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். புளியை கரைத்து கொள்ளுங்கள்.  வெங்காயத்தை பொடியாக நறுக்கி, பூண்டை தோல் உரித்தும் வைத்துக்  கொள்ளுங்கள். 
 
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு சேர்த்து, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை பெருங்காயம் சேர்த்து வதக்குங்கள். பிறகு நறுக்கிய வெங்காயம், தோல் உரித்த பூண்டுப்பல்லைச் சேர்த்து மூன்று நிமிடம் வதக்குங்கள். சாம்பார் பொடி மற்றும் மஞ்சள் தூளைச் சேர்த்து மீண்டும் வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடுங்கள்.  பச்சை வாசனை போனதும் அரைத்த சீரகப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். நன்கு கொதித்ததும்,  வெல்லத்தைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்க வேண்டும். சுவையான சீரகக் குழம்பு தயார்.> >  

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :