Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காய்ச்சலை குணமாக்கும் மருத்துவ ரசம் செய்ய...!

Sasikala|
உடல் வலி, காய்ச்சல், சளி வந்தவர்களுக்கும் ஏற்றது இந்த மருந்து ரசம். இதை செய்வது மிகவும் எளிமையானது.
 
தேவையான பொருட்கள்:
 
கண்டந் திப்பிலி குச்சிகள் - 6 (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) 
பூண்டு - 4 பல் 
புளி - நெல்லிகாய் அளவு
துவரம் பருப்பு - ஒரு டீஸ்பூன் 
தனியா - ஒரு டீஸ்பூன் 
மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன் 
மிளகாய் - வற்றல் 2 
சுக்குத்தூள் - ஒரு டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிதளவு 
கொத்தமல்லித்தழை - சிறிதளவு 
கடுகு - கால் டீஸ்பூன் 
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை 
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை 
உப்பு - தேவைக்கு 
நெய் - ஒரு டீஸ்பூன்

 
செய்முறை:
 
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். வெறும் வாணலியில் கண்டந் திப்பிலி, துவரம் பருப்பு,  தனியா, மிளகாய் வற்றல், மிளகு, சீரகம் சேர்த்து வறுத்து எடுக்கவும். அதனுடன் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து விழுதாக  அரைத்து எடுக்கவும்.
 
புளிக்கரைசலுடன் உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். புளியின் பச்சை வாசனை போன பிறகு  சுக்குத்தூள், அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ரசம் நுரைத்து வரும் போது இறக்கவும்.
 
வாணலியில் நெய் விட்டு கடுகு தாளித்து ரசத்துடன் சேர்க்கவும். மேலே கொத்தமல்லித் தழை தூவி சூடான சாதத்துடன்  பரிமாறவும். இதனை சூப் போலவும் குடிக்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :