Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அவல் போண்டா செய்ய தெரிந்து கொள்வோம்...

Sasikala|
தேவையான பொருட்கள் : 
 
தட்டை அவல் - ஒரு கப் 
உருளைக்கிழங்கு - ஒன்று 
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3 
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு 
கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன் 
எண்ணெய் - 200 கிராம் 
உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தேவையான அளவு

 
செய்முறை: 
 
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். அவலை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்த பின் தண்ணீர் இல்லாமல்  பிழிந்து வைக்கவும். வெங்காயம்,  பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
* ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவல், மசித்த உருளைக்கிழங்கு, கரம்மசாலா தூள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய்,  தயிர், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர்  தெளித்து கொள்ளலாம்.
 
* கடாயை அடுப்பில் வைத்து பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை போண்டா சைஸில் உருட்டி,  சூடான எண்ணெயில், போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதிகம் சிவந்து விடாமல் பொரித்தெடுக்கவும். சுவையான அவல் போண்டா தயார்.


இதில் மேலும் படிக்கவும் :