1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

ஆரோக்கியம் தரும் இஞ்சி குழம்பு செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
இஞ்சி - 200 கிராம்
தேங்காய் - அரை மூடி
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
பூண்டு - 5 பற்கள்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டேபிள் ஸ்பூன்
வெந்தய தூள் - அரை டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு வத்தல், மிளகு - 3
கறிவேப்பிலை - 3 கொத்து
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
 
முதலில் தேங்காயை துருவி வைத்து கொள்ளுங்கள். இஞ்சியை நன்றாக தோல் சீவி சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நறுக்கிய இஞ்சி மற்றும் தேங்காயை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள். வறுக்கும் பொழுது  எண்ணெய் சேர்க்காமல் வறுக்க வேண்டும்.
 
வறுத்த தேங்காய் மற்றும் இஞ்சியை சூடு ஆறும் வரை வைத்திருந்து அதன் பின் கூடவே புளி, பூண்டு, வத்தல் மிளகாய் பொடி, தனியா தூள்,  சீரகம், வெந்தய தூள் சேர்த்து நன்றாக மை போல அரைத்து வைத்து கொள்ளுங்கள்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணையை ஊற்றி சூடானதும் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை மற்றும் வத்தல் மிளகாயை போட்டு லேசாக கிளறி அதன் பிறகு அரைத்து வைத்திருக்கும் இஞ்சி விழுது மசாலா கலவையை வாணலியில் சேர்த்து கூடவே சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். தேவைக்கு உப்பை சேர்த்து கொள்ளுங்கள். இந்த கலவை கொதித்ததும் இஞ்சி குழம்பு தயார். 
 
குறிப்பு:
 
இந்த இஞ்சி குழம்பு வறுத்து செய்வதால் 1 வாரம் வரை கெடாமல் இருக்கும். மேலும் பசி எடுக்காமல் இருப்பவர்கள் இந்த இஞ்சி குழம்பு  சேர்த்து வந்தால் நன்கு பசி எடுக்கும். மேலும் செரிமானமும் நன்கு  நடைபெறும்.