பிரியாவை கொண்டாடும் இளைஞர்கள்; காண்டாகும் தமிழ் பெண்கள்

Priya Prakash Varrier
Last Updated: திங்கள், 12 பிப்ரவரி 2018 (17:36 IST)
அண்மையில் வெளியான ஒரு அடார் காதல் படத்தின் ப்ரோமோ வீடியோ இணையதளத்தில் வைரலானதை அடுத்து அதில் நடித்துள்ள நடிகை பிரியா பிரகாஷ் வாரியார் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளார். 

 
ஜிமிக்கி கம்மல் ஷெரிலை தொடர்ந்து தற்போது இணையதளத்தில் பிரியா பிரபலாமியுள்ளார். இளைஞர்கள் பிரியாவை கொண்டாடி வருகின்றனர். அவரது முக பாவனை பலரையும் ஈர்த்துள்ளது. 
 
தொடர்ச்சியாக ஃபேஸ்புக்கில் இவரது புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாக தமிழ் பெண்கள் பிரியாவுக்கு எதிராக பொங்கியுள்ளனர். ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் பெண்கள் பிரியாவை திட்டியும், பிரியா புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்து வரும் ஆண்களையும் திட்டியும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 
 
அதில் ஒரு பதிவு ரசிக்கும் படி இருந்தது. இளைஞர்கள் கேரள பெண்களை கொண்டாடுவதால் பெண்கள் எந்த அளவுக்கு வெறுப்பில் உள்ளனர் என்பதை இந்த ஒற்றை பதிவு வெளிக்காட்டுகிறது.
 
இவள பிடிச்சா எல்லோரும் கேரளாவுக்கு ஓடுங்க. அங்க போய் அவ கிட்ட சொல்லுங்க அத விட்டுட்டு சும்மா இந்த மூஞ்ச போஸ்ட் போடாதீங்கயா செம கடுப்பா இருக்கு ச்சீ.. என்று  பதிவிட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :