1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2018 (12:59 IST)

பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்

நிலத்தகராறு காரணமாக குர்தேஜ் சிங் என்ற இளைஞர் ஒருவர் தனது தற்கொலை விடியோவை பேஸ்புக்கில் நேரலையாக பதிவு செய்தார்.
 
பஞ்சாப் மாநிலத்தின் முக்தர்சாகிப் என்னுமிடத்தில் நிலத்தகராறு பிரச்சனையின் காரணமாக மிகுந்த மன உளைச்சல் அடைந்த இளைஞர், தனது தற்கொலையை பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பு செய்ய போவதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.

 
அவர் சொன்னதை போலவே தனது தற்கொலையை பேஸ்புக்கில் நேரலையாக பதிவு செய்தார். அதில் அவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு ரத்த வெள்ளத்தில் சாய்ந்து கிடந்தார்.
 
இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் இருந்த குர்தேஜ் சிங்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.