இளையராஜாவை திடீரென சந்தித்த அன்புமணி ராமதாஸ்

Last Modified சனி, 3 பிப்ரவரி 2018 (01:33 IST)
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று இசைஞானி இளையராஜா அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது சமீபத்தில் இளையராஜா அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பத்மவிபூஷன் விருதுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். மேலும் இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தியும் மரியாதை செய்தார். அன்புமணியின் வாழ்த்தால் இளையராஜா நெகிழ்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அன்புமணி தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: பத்மவிபூஷன் விருது பெற்ற இசைஞானி இளையராஜா அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தேன்' என்று கூறி இசைஞானியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :