வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2018 (21:31 IST)

அப்போ ஜிமிக்கி கம்மல்... இப்போ கண் அடிக்கும் பிரியா... வைரலாகும் வீடியோ

அண்மையில் வெளியான ஒரு அடார் காதல் மலையாள படத்தின் ப்ரோமோ வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

 
ஒரு அடார் காதல் என்ற மலையாள படத்தின் ப்ரோமோ வீடியோ அண்மையில் வெளியாகி வைரலாகியுள்ளது. ஜிமிக்கி கம்மல் பாடல் இணையத்தில் வைரலானது போல் தற்போது இந்த வீடியோவும் வைரலாகியுள்ளது. 
 
ஜிமிக்கி கம்மல் வீடியோவில் நடனம் ஆடிய ஷெரில் மிகவும் பிரபலமானார். அதேபோன்று இந்த வீடியோ உள்ள பிரியா பிரகாஷ் தற்போது பிரபலமாகியுள்ளார். கேரள பெண்கள் என்றாலே அழகு என்ற கருத்து தமிழக இளைஞர்கள் மத்தியில் வலம் வருவது வழக்கம்.
 
பிரியா தனது முக பாவனை மூலம் அனைவரையும் கவர்ந்து விட்டார். தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் இவர் பிரபலமாகியுள்ளார். இவருக்கென தற்போது ஒரு ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. டிவிட்டரில் உள்ள டிரெண்டிங் ஹேஸ்டேக்கில் #PriyaPrakash என்ற ஹேஷ்டேக் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.