திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஜூலை 2018 (14:06 IST)

மகரம் ராசிக்கான ஆடி மாத ராசி பலன்கள்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

மகரம் பணி என்பதற்கேற்ப எந்த வேலையைக் கொடுத்தாலும் சோம்பலில்லாமல் செய்யத் துடிக்கும் மகர ராசி அன்பர்களே




இந்த மாதம் சில நன்மைகள் தரக்கூடிய வகையில் இருக்கும் கால கட்டம். சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டால் பொருளாதார வகையிலும் வாழ்க்கைத் தரத்திலும் வளர்ச்சி உண்டாகும். ஏராளமானோர் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். சிக்கல்கள் வராது.குடும்பத்தில் எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும். இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட  முயற்சி செய்யுங்கள். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் சில அனுகூலம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான கால கட்டமாகும். மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சம்பள உயர்வும், பதவி உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். உடன்பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம்.

தொழிலதிபர்கள் உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய கால கட்டத்தில் நன்மைகள் நடக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடலாம். புதிய தொழில் ஆரம்பிக்கக்கூடிய முயற்சிகள் ஆலோசனைகளில் ஈடுபடலாம். நல்ல லாபம் கிடைக்கும்.

பெண்கள் நிறைய விசயங்களில் காரியத்தாமதம் ஏற்படலாம். உத்தியோகம் பார்க்கும் பெண்கள் வேலையில் கவனச் சிதறல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். உங்கள் கௌரவம் நிலை நாட்டப்படும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும். எந்த விசயத்திலும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.

கலைஞர்கள் நல்ல பெருமையும், புகழும் கிடைக்கப் பெறுவர். கடினமாக உழைக்க வேண்டி வரும். மிகவும் பணிச்சுமையால் நேரத்திற்கு உணவருந்த முடியாமல் வாயுத் தொல்லை வயிற்று உபாதைகள் ஏற்பட்டு மறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்பு நல்குவர்.

அரசியல்வாதிகள் அரசு சார்ந்த விசயங்களில் பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். மக்கள் தொடர்பான பணிகளில் பணியாற்றும் போது கவனம் தேவை. நல்ல செல்வாக்கு கௌரவம் கிடைக்கும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிய நேரலாம். நன்கு பணியாற்றி நற்பெயரை எடுப்பீர்கள்.மாணவர்கள் மாணவிகள் நல்ல சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். நீண்ட நாட்களாக காணாமல் போன பொருள் ஒன்று கிடைக்கும். நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். நீராஞ்சன தேங்காய் தீபம் ஏற்றவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, சனி