திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஜூலை 2018 (13:57 IST)

விருச்சிக ராசிக்கான ஆடி மாத ராசி பலன்கள்

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

உழைப்பவரே உயர்ந்தவர் என்பதற்கேற்ப உழைப்பை மட்டுமே நம்பி சாதனைகளை புரிய விருப்பப்படும் விருச்சிக ராசி அன்பர்களே




இந்த மாதம் வாழ்க்கை வளம் முன்னேறும். அதே வேளையில் தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வயிறு சம்மந்தமான பிரச்சனையுள்ளவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் வரலாம். உணவுக்கட்டுப்பாடு அவசியம். கைவிட்டுப்போன பொருட்கள் மீண்டும் உங்களை வந்தடையும். வழக்கு வியாஜ்ஜியங்களில் இருந்து வந்த சங்கடங்கள் விலகும்.
குடும்பத்தில் குடும்பத்தில் இருந்து வந்த சின்னச் சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் கிடைக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர். தந்தை, தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம். சுபச் செலவுகள் நிகழும். சாகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். முன் யோசனையுடன் திட்டமிடல் குடும்பத்தில் சிக்கலை தீர்க்கும்.

உத்தியோகஸ்தர்கள் விரும்பிய பதவி கிடைக்கும். எதிரிகளின் இன்னல் இருக்கும் இடம் தெரியாமல் போகும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய இடத்திற்கு பணி இடமாற்றம் கிடைக்கும். எதிர்காலத்திற்குத் தேவையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள்.தொழிலதிபர்கள் வாழ்க்கையில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்துச் செய்யப்படும் தொழில் முன்னேற்றம் ஏற்படும். அதே நேரம் சில புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும். ஊழியர்களை உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் உழைக்க வைத்து அவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.

பெண்கள் அக்கம், பக்கத்தாரிடையே ஒற்றுமை பலப்படும். பொருளாதார வலிமை கூடும். அதே வேளையில் பொருட்களின் மீது கவனமும் தேவை. இழப்புகளும் ஏற்படலாம். நண்பர்களிடம் பழகும் போது எச்சரிக்கை தேவை. சீரான வாழ்க்கை அமைய வில்லை என்று கவலைப்பட்டு கொண்டிருந்த பெண்களுக்கு சந்தோஷமான வாழ்க்கை நல்ல படியாக அமையும்.
கலைஞர்கள் கலைத்துறையில் உள்ளவர்களுக்குசீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். எதிலும் சாதிக்க வேண்டி கடினமான உழைப்புக்கு ஆளாவீர்கள். மூத்த கலைஞர்கள் உங்களிடம் உள்ள திறமைகளை புரிந்து கொள்வார்கள். நன்மைகள் சிறிது தாமதத்திற்கு பின்னரே கிடைக்கும்.

அரசியல்வாதிகள் சமூக சேவையில் உள்ளவர்களுக்கு  மிகுந்த உற்சாகமாக இருக்கும் காலகட்டம். பொது இடத்தில் பேசும் போது கவனம் தேவை. மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். உங்களின் நலம் விரும்பி ஒருவர் உங்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக விளங்குவார்.மாணவர்கள் மாணவ கண்மணிகளுக்கு  கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். சிலருக்கு மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும், வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். நண்பர்களிடத்தில் பழகும் போது சில பழிச்சொல்லுக்கு ஆளாக நேரலாம் கவனம் தேவை.

பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். அரளி மாலை சாற்றவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்