Widgets Magazine

சிம்மம் ராசிக்கான ஆடி மாத பலன்கள்

tamil month rasi palan
Last Modified வெள்ளி, 13 ஜூலை 2018 (13:25 IST)
சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

சிம்மம் பெருமை என்பதற்கேற்ப எந்த காரியத்தைக் கொடுத்தாலும் அதில் பெருமை தேடித்தரும் சிம்ம ராசி அன்பர்களே,
இந்த மாதம் பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். மனதில் நிம்மதியும், ஆனந்தமும் ஏற்படும். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும். சந்தான பாக்கியம் கிடைப்பதற்கான உன்னதமான கால கட்டம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடை பெறும். புதிய வீடு, மனை வாங்குவதில் தடைகள் ஏற்படலாம். சற்று காலத்திற்கு ஒத்திப் போடுவது நல்லது.

குடும்பத்தில் மனைவி வழியில் சிற்சில கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும். ஆனால் உறவினர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து வேறுபாடு வரலாம். பிள்ளைகளால் பெருமை காணலாம். தூரத்து உறவினர்களின் மூலம் அனுகூலமும் கிடைக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.உத்தியோகஸ்தர்கள் நெருப்பு தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு மிகுந்த கவனம் தேவை. கோரிக்கைகள் நிறை வேறும். சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரனையாக இருப்பார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நீங்கள் திறமையாக செய்வீர்கள். அதிக வேலைப்பளு இருந்தாலும் திறமையாகச் செய்து நற்பெயர் எடுப்பீர்கள்.  

தொழிலதிபர்கள் தொழில் உன்னத நிலையை அடையும். புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. வியாபாரிகலுக்கு உங்களுடைய வியாபாரம் சீராக நடக்கும். முதலீடுகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள். கூட்டு வியாபாரங்களிலிருந்து  வந்த சுணக்க நிலை மாறும். வரவு சீராக இருக்கும். பெண்கள் வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். வீட்டில் நிலவி வந்த கருத்து வேறுபாடு மறைந்து உறவுகள் நல்ல முறையில் இருக்கும். உடல் நலம் சிறப்படையும். சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு தேவை. பித்தம் மயக்கம் போன்ற உபாதைகள் வந்து நீங்கும். அலைச்சல்களை சந்தித்தாலும் வேலைகளை விரைந்து முடிப்பர்.

கலைஞர்கள் கலைத்துறையினருக்குப்பொன்னான காலமிது. சிறிது முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். கேட்ட இடங்களிலிருந்து வாய்ப்புகள் வந்து மனநிறைவைக் கொடுக்கும். நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த காரியங்களை முடிப்பீர்கள்.
அரசியல்வாதிகள் அதிகமாக உழைத்து பாராட்டைப் பெறுவீர்கள். வரவு செலவு கணக்கில் இருந்து வந்த சந்தேகம் விலகும். உங்களின் மதிப்பு மிகுந்த ஒருவர் உங்களைச் சந்திக்க வருவார். எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண வரவு உண்டு. வெள்நாடுகளுக்குச சென்று வர வாய்ப்புண்டு.

மாணவர்கள் சிறிது சிரத்தை எடுத்தாலே பெரு வெற்றி பெறலாம். அனைத்திலும் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும். நண்பர்களின் பிரச்சனைகளை நீங்கள் தீர்த்து வைத்து பாராட்டைப் பெறுவீர்கள். ஆசிரியர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும். கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்தி எதிர்கால வாழ்க்கைக்கு வித்திடுவீர்கள்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள கால பைரவரை வணங்குங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் 


இதில் மேலும் படிக்கவும் :