கந்துவட்டி கொடுமை: கமல் மெளனம் ஏன்?

sivalingam| Last Modified வியாழன், 23 நவம்பர் 2017 (06:30 IST)
நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்து மரணம் அடைந்தபோது டுவிட்டரில் பொங்கிய கமல், தற்போது அவரது துறையை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து கமல் எந்த கருத்தையும் கூறாமல் மெளனமாக இருப்பது அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.

முண்டாசு கட்டிய பாரதியின் கெட்டப்பில் டுவிட்டரில் புதியதாய் தோன்றும் கமலுக்கு இந்த கொடுமை கண்களுக்கு தெரியாதது ஏன்? என்று கோலிவுட் திரையுலகினர் கேள்வி கேட்டு வருகின்றனர். இளம் நடிகர்கள், இயக்குனர்கள் கூட கந்துவட்டிக்கு எதிராக குரல் கொடுத்து கொண்டு வரும் நிலையில் தன்னுடைய துறை சார்ந்த ஒருவருக்கு ஏற்பட்ட அநியாயத்தையே தட்டிகேட்காத கமல், மக்களுக்கு நேரும் அநியாயத்தை எப்படி தட்டிக்கேட்பார்? என்றா கேள்வி எழுகிறது.

ஆனால் கமல் மெளனத்திற்கு கண்டிப்பாக காரணம் இருக்கும் என்றும், ஒருவேளை இந்த விஷயத்தில் கமல் குரல் கொடுத்தால் அவருக்கு ஏற்படும் சிக்கலை தவிர்க்கவே அவர் மெளனமாக இருப்பதாகவும் கோலிவுட்டில் சிலர் கூறி வருகின்றனர். கமல் மட்டுமின்றி ரஜினி, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் மெளனம் கோலிவுட்டில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :