Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கமல் பாணியில் கமலை கலாய்த்த தமிழிசை

sivalingam|
நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டரில் போடும் பதிவுகள் அனைத்துமே சுத்தமான செந்தமிழில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. பல டுவீட்டுக்கள் உண்மையிலேயே கோனார் உரையை தேட வேண்டிய நிலையில் தான் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஊரில் உள்ள ஊழல்கள், குற்றங்கள் குறித்து செந்தமிழில் குரல் கொடுத்து வரும் கமல், நேற்று தன்னுடைய துறையில் கந்துவட்டியால் ஒரு உயிர் இழந்ததற்கு மயான அமைதி காத்து வருகிறார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த அமைதியை பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், கமல் பானியில் தூய தமிழில் ஒரு ஸ்டேட்டஸ் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, தன்துறை சார்ந்த துக்கம் தன்னை ஏற்றி விட் டதுறையில் பெரும் துயரம் பகிர்ந்து கொள் ளா கொடூர அமைதி திடீர் டுவிட்டர் அரசியல்வாதிகள் எங்கே?தேடத்தான் வேண்டும்! என்று கூறியுள்ளார். இந்த டுவீட்டுக்கு கமல் ரசிகர்களும் பாஜக தொண்டர்களும் காரசாரமாக பதிலளித்து வருகின்றனர்


இதில் மேலும் படிக்கவும் :