Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பேச்சுவார்த்தையில் இழுபறி: 'மெர்சல்' உள்ளிட்ட படங்களின் கதி என்ன?


sivalingam| Last Modified வியாழன், 12 அக்டோபர் 2017 (14:52 IST)

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்', நயன்தாராவின் அறம்', சசிகுமாரின் 'கொடிவீரன்' உள்பட ஒருசில படங்கள் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

 


ஆனால் கேளிக்கை வரியை முற்றிலும் நீக்க வேண்டும், அதுவரை புதிய படங்கள் வெளியீடு இல்லை என்று அறிவித்திருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இன்று மூன்றாவது நாளாக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியாகவே உள்ளது. கேளிக்கை வரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை புதிய திரைப்படங்கள் இல்லை என்று ஒருபுறம் தயாரிப்பாளர் சங்கம் உறுதியாக இருக்க, 'மெர்சல்' படம் தீபாவளிக்கு ரிலீஸ் உறுதி என்று படக்குழுவினர்களும் இன்னொருபுறம் உறுதியாக இருக்க இருதரப்பினர்களிடையே டென்ஷன் அதிகரித்து வருகிறது. இன்னும் தீபாவளிக்கு 6 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் புதிய ரிலீஸ் விஷயத்தில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :