டெங்கு காய்ச்சல்: நேரடியாக களமிறங்கிய விஜயகாந்த்


sivalingam| Last Modified வியாழன், 12 அக்டோபர் 2017 (10:32 IST)
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தற்போது உடல்நலம் தேறி புத்துணர்ச்சியுடன் இருப்பதால் மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் தலைவிரித்தாடி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் அரசின் டெங்குக்கு எதிரான நடவடிக்கையை குறைகூறி வருகின்றன.


 
 
இந்த நிலையில் சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் தரும்படி தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் இன்று காலை திடீரென திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த விஜயகாந்த் அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்
 
மேலும் அங்குள்ள மருத்துவர்களை சந்தித்து டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் தேமுதிக நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்த விஜயகாந்த், 'தமிழகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, இன்று தே.மு.தி.க கட்சியினர் நேரில் சென்று உதவிகள் செய்ய வேண்டும்'' என தொண்டர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :