1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (09:59 IST)

மாபெரும் சாதனை செய்த மெர்சல்: சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு

சர்வதேச அளவில் நடிகர் விஜய் ஒரு மிகச் சிறந்த நடிகர் என தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் டீசர், டிரைலர் உலக அளவில் சாதனை செய்தது. அதேபோல் வசூலிலும் ரூ.200 கோடியை தாண்டியது.  
 
மெர்சல் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சர்வதேச அளவில் வழங்கப்படும் ஐஏஆர்ஏ விருதுகளுக்கு விஜய்யின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
சிறந்த நடிகருக்கான பட்டியலில் விஜய்யுடன் டென்னன்ட், ஜான் பொயேகா, ஜாக் பெர்ரி ஜோன்ஸ் உள்ளிட்ட சில ஹாலிவுட் நடிகர்களின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டது.
 
இந்நிலையில்  ஐஏஆர்ஏ, நடிகர் விஜய் மெர்சல் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் பலர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
ஐஏஆர்ஏ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒரே தமிழ் நடிகர் விஜய் தான் என்ற பெருமையோடு நின்றுவிடாமல் விருதை தட்டிச்சென்று சாதனை படைத்துள்ளார் விஜய்.