ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 22 செப்டம்பர் 2018 (20:17 IST)

அட்லியை வாழ்த்திய அவரது காதல் மனைவி

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து ராஜா ராணி எனும் திரைப்படம் வாயிலாக தமிழில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் அட்லி.


அதன் பிறகு அவர் நடிகர் விஜயை வைத்து தெறி என்ற படம் இயக்கினார். அதன் பின் மெர்சல் படத்தை இயக்கி முக்கிய இயக்குநராகவும் ஜொலித்து வருகிறார்.

திரைப்படங்களில் துணை நடிகையாக வலம்வந்துகொண்டிருந்தவர் ப்ரியா. இவர்கள் இருவரும் கடந்த  2014இல் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதில் பல முக்கிய திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு மண மக்களை வாழ்த்தினர்.  இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 21) தனது காதல் கணவரான அட்லியின் பிறந்தநாள் என்பதால்  ட்விட்டரில் அவரை வாழ்த்தியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

“உங்களைவிட ஒரு சிறந்த நண்பர் கிடையாது. உங்களைவிட ஒரு சிறந்த கணவர் கிடையாது. உங்களை விடவும் ஒரு சிறந்த மகன் கிடையாது. உங்களை விட ஒரு சிறந்த மருமகன் கிடையாது. நான் வியக்கும் மனிதருடன் வாழ்க்கையை பகிர்ந்துகொண்டு அவருடன் இருப்பதை ஆசிர்வாதமாக கருதுகிறேன். என் அனைத்துமாக உள்ளவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்’’ என்று கூறியுள்ளார். ப்ரியாவின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் சிறப்புக் கவனத்தைப் பெற்றுவருகிறது.