ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 22 செப்டம்பர் 2018 (13:56 IST)

விஜய் படத்தின் பாடல் வரியை படத்தலைப்பாக்கிய சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜேஷின் படத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். எஸ்கே 13 என்ற பெயரில் இந்த படம் இயக்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் சமந்தா நடிப்பில் வெளியான தெறி படத்தில் இடம்பெற்ற ஜித்து ஜில்லாடி பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
 
இந்த ஜித்து ஜில்லாடி பாடல் வரியை சிவகார்த்திகேயன் படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இயக்குநர் ராஜேஷ் படத்தலைப்பு குறித்து விளக்கமளித்துள்ளார். 
 
இதுதொடர்பாக அவர், எஸ்கே 13 படத்தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கண்டிப்பாக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என கூறியுள்ளார்.