’’கில்லி’’ படத்தை மீறும் விறுவிறுப்பு....விஜய்யின் ’’மாஸ்டர்’’ ஆக்சன் சரவெடி...ஹேஸ்டேக் டிரெண்டிங்

master
Sinoj| Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (17:36 IST)


இன்று மாலை மாஸ்டர் படத்தின் ஒரு முக்கிய புரோமோ தற்போது
வெளியாகி
வைரலாகி வருகிறது.விஜய் ,சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.


வரும் ஜனவரி 14 ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் தியேட்டரில் ரிலீஸாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று மாலை மாஸ்டர் படத்தின் ஒரு முக்கிய புரோமோ ரிலீஸாகவுள்லதாக இப்படத்தின் வசனகர்த்தா ரத்னகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த நிலையில் 5 வது புரொமோ வெளியாகியுள்ளது.

இதில், அர்ஜூன் தாஸ் விஜய்யின் வம்பு செய்வதுபோலவும், அப்போது கபடி விளையாட்டில் பத்ரி என்ற அர்ஜூன் தாஸ் டீமை விஜய் பந்தாடுவதுதான் இந்த
டீசர் வீடியோவில் உள்ளது.

அநேகமாக கில்லி படம் 2 என்று சொல்லத்தக்க அளவில் இது விறுவிறுப்பாக உள்ளது. ஏற்கனவே கில்லி படத்தில் வித்யாசாகர் இசையமைத்திருந்த நிலையில் இப்படத்திற்கு அனிருத் தனது பாணியில் அசத்தலாக இசையமைத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் தற்போது கில்லி என்று விஜய் ரசிகர்கள் ஹெஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங்
செய்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :