விஜய் என்னை அப்படிதான் அழைப்பார் – மாஸ்டர் ஹீரோயின் பதில்!

Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (16:56 IST)

மாஸ்டர் படத்தின் நாயகி சமூகவலைதளங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து படத்துக்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாஸ்டர்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கௌரி கிஷான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை இப்போது படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் சமூகவலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் ‘விஜய் உங்களை எப்படி அழைப்பார் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மாளவிகா ‘விஜய் சார் என்னை மாளு என அழைப்பார்’ எனப் பதிலளித்துள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :