மாஸ்டர் படத்தின் லீக்கான காட்சிகளை பரப்புவது இவர்களா?

Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (16:32 IST)

மாஸ்டர் படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்த நிலையில் அதை அஜித் ரசிகர்கள் பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள திரைப்படமாக மாஸ்ட திரைப்படம் உள்ளது. லோகேஷ் இயக்கியுள்ள அந்த
திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. ஆனால் படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் திருட்டுத்தனமாக சிலரால் வெளியிடப்பட்டன. இதனால் அதிர்ச்சியான படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘இது எங்களின் ஒன்றரை வருட உழைப்பு. தயவு செய்து இன்னும் ஒருநாள் காத்திருங்கள் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த காட்சிகளை அதிகளவில் இணையத்தில் அஜித் ரசிகர்கள்தான் பரப்பினார்கள் என சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் கடந்த ஆண்டு அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் காட்சிகள் இதேபோல இணையத்தில் வெளியான போது அதை விஜய் ரசிகர்கள் போட்டி போட்டு பரப்பினார்களாம். அதற்குப் பழிவாங்கதான் இப்போது அஜித் ரசிகர்கள் பரப்புவதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :