Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

“நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தால் தமிழில் நடிப்பேன்” – வித்யா பாலன்

vidya balan
cauveri manickam| Last Modified வியாழன், 12 அக்டோபர் 2017 (17:13 IST)
‘நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் தமிழில் நடிப்பேன்’ என பாலிவுட் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

 

 
பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராகத் திகழ்பவர் வித்யா பாலன். வித்தியாசமான, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய பல படங்களில் நடித்து வருகிறார். ‘காலா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும், ‘கொடி’ படத்தில் தனுஷுடன் நடிக்கவும் இவரை அப்ரோச் செய்தனர். ஆனால், அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டார் வித்யா பாலன்.

“ஆரம்பத்தில் எனக்குத் தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், எனக்கு மகிழ்ச்சிதான். தமிழில் வாய்ப்பு கிடைக்காததனால்தான், என் கெரியர் தற்போது நன்றாக இருக்கிறது. என் கனவு நனவாகி இருக்கிறது. நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால், கதையைக் கேட்கும்போது எனக்குப் பிடித்திருந்தால் நிச்சயம் தமிழில் நடிப்பேன். சமீபத்தில், மாதவன் – விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ பற்றிக் கேள்விப்பட்டேன். படம் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் வித்யா பாலன்.


இதில் மேலும் படிக்கவும் :