எமிஜாக்சனின் பிகினி உடை ஸ்டில்லை வெளியிட்ட ஷங்கர்


sivalingam| Last Modified புதன், 11 அக்டோபர் 2017 (14:43 IST)
இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இன்று கடைசிகட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது.


 
 
இன்றைய படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்படவுள்ளதாகவும், அதில் ரஜினிகாந்த் மற்றும் எமிஜாக்சன் கலந்து கொள்கின்றனர் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்று இந்த பாடலின் படப்பிடிப்பு தொடங்குவதை அடுத்து இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டரில் எமிஜாக்சனின் புதிய ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
ரோபோ தோற்றத்தில் எமிஜாக்சன் பிகினி உடையில் இருக்கும் இந்த ஸ்டில் அட்டகாசமாக இருப்பதாக விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த ஸ்டில்லில் இருந்தே இந்த படத்தின் உலக தரத்தை புரிந்து கொள்ளலாம் என்று டுவிட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :