வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 11 அக்டோபர் 2017 (15:00 IST)

ரஜினியும், கமலும் ஓட்டுக்கு பணம் கொடுப்பார்களா?; நடிகை ஸ்ரீபிரியாவின் பதில்

ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்தால், அவர்களால் ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியுமா என்று ரசிகர் ஒருவரின் கேள்விக்கு நடிகை ஸ்ரீபிரியா ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

 
இந்நிலையில் அரசியல் வருகை குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி அறிவிக்கக் கூடும்  என்றும், நடிகர் ரஜினியோ அவரது பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தமிழக அரசியலில் முதலில் அரசியலுக்கு வருவது ரஜினியா, கமலா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவ்வப்போது இவர்களின் கருத்துகள் தொலைகாட்சி சேனல்களும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அவர்களால் நல்லதொரு  மாற்றத்தை ஏன் கொண்டு வரமுடியாது?. அவர்கள் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் நடிகை ஸ்ரீ பிரியா.
 
கருத்து தெரிவித்த ஸ்ரீபிரியாவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் போன தடவை ரூ.1000 கொடுத்தீர்கள்,  இப்போது எவ்வளவு கொடுப்பீர்கள் என வேட்பாளர்களிடம் மக்கள் கேட்கிறார்கள். அவ்வளவு பணத்துக்கு கமலும், ரஜினியும்  எங்கே போவாங்க என்று கேள்வி கேட்டுள்ளார். இதற்கு ஸ்ரீபிரியா, உங்கள் ஓட்டை ஒருமுறை விற்றுவிட்டால் அரசின் தரத்தை  கேள்வி கேட்கும் அதிகாரத்தை இழந்து விடுவீர்கள். ஏனென்றால் அந்த பணமானது கணக்கில் வராதது என்று தெரிவித்துள்ளார்.