1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2017 (18:08 IST)

தயாரிப்பாளர் சிக்கினால் அடுத்த வருடம் இந்த நேரம் 'உள்ளே வெளியே 2': பார்த்திபன்

பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்.பார்த்திபன் இன்று தனது பிறந்த நாளை நண்பர்களுடன் குதூகுலத்துடன் கொண்டாடினார். இன்றைய பிறந்த நாளை முன்னிட்டு அவர் ஒரு கவிதை எழுதி அதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த கவிதையின் அடுத்த வருடம் இதே பிறந்த நாள் அன்று 'உள்ளே வெளியே 2' படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும், ஆனால் கதை தயாராக இருந்தும் தயாரிப்பாளர்தான் இன்னும் சிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய நீண்ட கவிதை இதுதான்:


 


ஆயிரம் அடிக்கும் அடியில்
ஆழ்துளை கலைக்கிணற்றில்
அகழ்வாய்வு கொண்ட
365 திங்களில்
அதிர்ஷடமெனும்
அபூர்வம் கண்டதில்லை நான்!
விதை புதைத்து
சுரை கொண்டதில்லை,
மரம் விதைத்தே
கனி உண்டிருக்கிறேன்.
பல்வேராய்ச்சியில்
பல்பு எரிந்தது போல...
பல்யுக்தி மல்யுத்த முயற்சியில்
நல் முத்துக்களாய்
கைதட்டல்கள் பெறுகிறேன்!
என் படங்களில் சூப்பர்
நட்சத்திரங்கள் நடித்ததில்லை
பிரம்மாண்ட இயக்குநர்களின்
படங்களில் நான் நடித்ததில்லை
இருப்பினும் இயங்குகிறேன்.
இருப்பை சிறப்பாய்
செதுக்கிய சமீபம் KTVI
பிறந்த நாளெனக்கு
14/4/1989(புதிய பாதை)! அடுத்த
பிறந்த நாளென்பது
'உள்ளே வெளியே 2'
வெளியீடும் வெற்றியும்!
தயார்: புதுமை+கமர்ஷியல் கதை.
தயாரிப்பாளர் தான்
முயற்'சிக்கவே' இல்லை!
என் இனிய பாரதி
ராசாவும் இசைய
ராசாவும் இன்றை
இளைஞ ராசாக்களும்
வருந்தி வாழ்த்துவது
"தகுதிக்கான உச்சம்
தொடவில்லை" என்பது.
எட்டாத ஸ்தூபம்
கிட்டாத ஸ்தானம்
அதற்கான ஸ்தூலம்
அறியவில்லை நானும்.
ஆனாலும் ஓடுகிறேன்
ஆறாமல் தேடுகிறேன்
அண்ணாந்து பார்க்கிறேநென்
விஸ்வரூப உழைப்பின் வியர்வை
சொட்டு சொட்டாய் நுனி
நாவை நனைக்க- உயிர்
கொள்ளும் சினிமா தாகம்
முன்பினும் மூர்க்கமாய்
மூச்சடக்கி பாய்கிறது.
வெற்றிக்கு உற்றோரே
உங்களின் வாழ்த்து
இன்றும் நாளையுமல்ல
இன்றியமையாதது என்றுமே
என்றறிவேன் நானும்
நன்றி'மறவேன்!!!