செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2017 (17:54 IST)

நடிகர் கமலுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த பிக்பாஸ் பிரபலங்கள்

நடிகர் கமல்ஹாசன் இன்று தன் 63-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக கமல் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால் மக்கள் நற்பணி மன்ற பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அவர் புதிய மொபைல் ஆப் ஒன்றை இன்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

 
கமலின் அரசியல் வருகைக்கு பலரும் வாழ்த்துகளைச் சொல்லிவரும் நிலையில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் பாபுஜிக்கு பிறந்தநாள் என வாழ்த்துச் சொல்லி புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இதேபோல பிக்பாஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஹரிஷ் கல்யாண், ஆர்த்தி, கணேஷ், ஆரவ், காயத்ரி, சுஜா, காஜல் என பலரும் தங்களது வாழ்த்துக்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.
 
நடிகை ஆர்த்தி ட்விட்டரில் ஒன் அண்ட் ஒன்லி பிக்பாஸ் 'நம்மவர்'! ஆளப்போறார் ஆண்டவர்!' என பதிவிட்டுள்ளார். எங்கள் இதய நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... அருமையான இந்த நினைவுகள் என்றும் என் நெஞ்சத்தில் குடியிருக்கும் கமல்ஹாசன் சார்! என ஹரிஷ் கமல்ஹாசனுக்கு முத்தம் கொடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். 
 
'உங்களை அப்பா என்றழைக்கும் அந்த மூன்று சொல் மந்திர பாக்கியத்தை எனக்கு அளித்ததற்கு மிக்க நன்றி - உங்கள் அன்பு மகள் சுஜா வருணி' என இவீட் செய்துள்ளார் சுஜா வருணி. காஜல் மை டியர் கமல் சார், நீங்க ஒரு டேலன்ட் பேக்கேஜ். உங்களது 60 வயசு தாண்டிடுச்சுனு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க. இப்போ பார்க்கிறதுக்கு 30 ப்ளஸ் மாதிரி இருக்கீங்க என்று கூறியுள்ளார்.
 
'பிறந்தநாள் வாழ்த்துகள் உலகநாயகன் பத்மஶ்ரீ கமல்ஹாசன் சார். என்னை வடிவமைத்துக் கொண்டிருப்பதற்கு நன்றி!' என பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் ட்வீட் செய்துள்ளார். காயத்ரி 'மிக விரைவில் நீங்கள் பெரிய அரசியல்வாதியாகி, மக்களுக்கு நல்லது செய்வதைப் பார்ப்பேன் எனும் நம்பிக்கை இருக்கிறது. எங்கள் குடும்பத்தினரின் சார்பாக அன்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என காயத்ரி ரகுராம் ட்வீட் செய்துள்ளார்.