நேரு பிறந்தநாளை மறந்த கூகுள்

Google
Abimukatheesh| Last Updated: செவ்வாய், 14 நவம்பர் 2017 (15:41 IST)
இன்று கூகுள் தனது முகப்பு பக்கத்தில் நேரு பிறந்தநாளுக்கு பதில் துளையிடும் கருவியின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறது.

 

 
ஒவ்வொரு நாளும் உள்ள சிறப்பை கூகுள் தனது முகப்பு பக்கத்தில் கொண்டாடுவது வழக்கம். விடுமுறை, தலைவர்களின் பிறந்தநாள், முக்கிய நிகழ்வுகள் என அனைத்தும் கூகுள் டூடுள் என வெளியாவது வழக்கம். அதுபோல இன்று நேருவின் பிறந்தநாள் என முக்கிய நிகழ்வு இருந்தாலும் அதைத்தவிர்த்து கூகுள் துளையிடும் கருவியின் 131வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது.
 
உலக அரசியல் தலைவர்களில் முக்கியமான ஒருவர்களில் நேருவும் ஒருவர். இவரது பிறந்தநாள் இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் துளையிடும் கருவின் 131வது பிறந்தநாளை கொண்டாடுவது இந்தியர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :