1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (22:53 IST)

'த்ரிஷா இல்லைனா நயன்தாரா 2' பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அடல்ட் காமெடி படமான 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்ட நிலையில் மீண்டும் இதே கூட்டணியில் ஒரு படம் உருவாகி வருகிறது.

இந்த படம் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா 2' என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை மாலை 6.45க்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக்கை நடிகர் ஜெயம் ரவி வெளியிடவுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரனின் முந்தைய படமான 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆதிக் உள்ளார். இதனால் அவர் பெரும் சிரத்தையுடன் மீண்டும் ஒரு அடல்ட் காமெடி படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.