வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வியாழன், 26 ஏப்ரல் 2018 (19:20 IST)

சமாதானம் ஆகிட்டோம்; அடுத்த படம் சிம்புவோடதான் - ஆதிக் ரவிச்சந்திரன் அதிரடி

நடிகர் சிம்புவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு முடிவிற்கு வந்துவிட்டதாகவும், விரைவில் சிம்புவரை வைத்து படம் இயக்குவேன் எனவும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷை வைத்து த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கியவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அந்த படம் இளசுகளை பெரிதும் கவர்ந்தது. அதன் பின்பு சிம்புவை வைத்து அன்பானவன், அசராதவன், அடங்காதவன் என பரபரப்பு காட்டினார். படத்தில் சிம்புவிற்கு 3 கெட்டப்,  ஹீரோயின்கள் என மாஸ் காட்டினார். படத்தில் இரு பாகமாகவும் வெளியாகும் எனக் கூறப்பட்டது.
 
ஆனால், படம் வெற்றியடையவில்லை. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பில் சிம்பு சரியாக கலந்து கொள்ளவில்லை. அதனால் ரூ.20 கோடி நஷ்டம் என இப்படத்தின் தயாரிப்பாளர் புகார் கொடுத்தார். அதன் பின் பல பஞ்சாயத்துகள் நடந்தது. ஆதிக்கோடு சிம்பு கோபமாக பேசும் செல்போன் உரையாடலும் இணையத்தில் வெளியானது.
 
தற்போது மீண்டும் ஜி.வி. பிரகாஷை வைத்து மீண்டும் ஒரு படத்தை ஆதிக் இயக்கி வருகிறார். மேலும், சிம்புவோடு ஏற்பட்ட மனக்கசப்பு முடிவிற்கு வந்துவிட்டது.  தற்போது இருவரும் அடிக்கடி பேசிக்கொள்கிறோம். அவருக்காக ஒரு கதை தயாராக இருக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
 
சிம்புவால் படம் தோல்வி அடைந்து,  இவ்வளவு பிரச்சனை ஏற்பட்ட போதிலும், அவரை வைத்து மீண்டும் படம் இயக்குவேன் என ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருப்பது தமிழ் சினிமா உலகினரை ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது