1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2024 (15:22 IST)

பிக்பாஸ் விக்ரமன் திருமணம்.. மணமகள் யார் தெரியுமா?

Vikraman
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதியில் டைட்டிலை நழுவ விட்ட விக்ரமனின் திருமணம் நேற்று சென்னையில் நடந்தது. இதனை தொடர்ந்து திரைத்துறையினரும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
பிக்பாஸ் சீசன் 6ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்த விக்ரமனுக்கு பார்வையாளர்களின் நீடித்த ஆதரவு கிடைத்ததால், அவர் வெற்றி பெறுவார் என பலரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக அசீம் டைட்டிலை கைப்பற்றினார்.
 
இந்நிலையில், விக்ரமன் தனது நீண்டநாள் காதலியான ப்ரீத்தி கரிகாலனை, சென்னையில் நேற்று திருமணம் செய்தார். ப்ரீத்தி என்பவர் இயக்குநர் பார்த்திபனின் உதவியாளராகவும், ‘கோடிட்ட இடங்களை நிரப்பவும்,’ ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ போன்ற படங்களில் அவருடன் பணியாற்றி வருகிறார்.
 
விக்ரமன் மற்றும் ப்ரீத்தி கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் புகைப்படங்கள் விக்ரமனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள நிலையில், பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை அள்ளி தந்து வருகின்றனர்.
 
 
Edited by Mahendran