Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கார்த்திக்-கவுதம் கார்த்திக் படத்தில் 2 தேசியவிருது இயக்குனர்கள்

செவ்வாய், 10 அக்டோபர் 2017 (10:45 IST)

Widgets Magazine

நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படம் ஒன்றை இயக்குனர் திரு இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு MR.சந்திரமெளலி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த படத்தின் நாயகிகளாக ரெஜினா மற்றும் வரலட்சுமி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் இயக்குனர் மகேந்திரன் மற்றும் இயக்குனர் அகத்தியன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இருவருமே தேசிய விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இயக்குனர் அகத்தியன், இந்த படத்தின் இயக்குனர் திருவின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. அகத்தியனின் மகள் கார்த்திகாவை திரு திருமணம் செய்துள்ளார். அகத்தியனின் இன்னொரு மகள் நடிகை விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விக்ரம் மகனுடன் ஜோடி சேர போவது கமலின் ரியல் மகளா? சூர்யாவின் ரீல் மகளா?

டோலிவுட்டில் சமீபத்தில் வெளியான ஆர்ஜுன் ரெட்டி படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் ...

news

சல்லி லியோனை காலி செய்த கோலிவுட் நாயகி!!

இந்திய சினிமாவின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பல பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். ...

news

“பாகுபலி இமேஜில் இருந்து வெளிவர விரும்பவில்லை” – பிரபாஸ்

‘பாகுபலி இமேஜில் இருந்து நான் வெளிவர விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார் பிரபாஸ்.

news

ரூ.1.2 கோடி செலவில் 2.0 ஆடியோ ரிலீஸ்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் ஆடியோ ரிலீஸுக்கு ரூ1.2 கோடி செலவிட ...

Widgets Magazine Widgets Magazine