அடுத்த ஷெட்யூலில் அரவிந்த் சாமி

Aravind samy
cauveri manickam| Last Modified திங்கள், 9 அக்டோபர் 2017 (13:50 IST)
‘நரகாசூரன்’ படத்தின் அடுத்த ஷெட்யூலில் அரவிந்த் சாமி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. 
‘துருவங்கள் 16’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், அடுத்ததாக இயக்கிவரும் படம் ‘நரகாசூரன்’. அரவிந்த் சாமி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், இரண்டாவது ஹீரோவாக சுந்தீப் கிஷண் நடிக்கிறார். ஸ்ரேயா சரண், ஆத்மிகா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். ‘துருவங்கள் 16’ எடுக்கப்பட்ட ஊட்டியிலேயே இந்தப் படமும் எடுக்கப்படுகிறது. கடந்த மாதம் தொடங்கிய முதல் ஷெட்யூல், கடந்த வாரம் முடிவடைந்துள்ளது. இந்த ஷெட்யூலில் சுந்தீப் கிஷண், ஆத்மிகா சம்பந்தப்பட்டக் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டன. அடுத்த ஷெட்யூலில் அரவிந்த் சாமி – ஸ்ரேயா சரண் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :