Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய், அஜித்துக்கு நண்பனா நடிக்க விரும்பினேன்: சிவகார்த்திகேயன்


sivalingam| Last Modified ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (22:57 IST)
விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தை பிடித்துவிட்ட சிவகார்த்திகேயன் ஒருகாலத்தில் சினிமாவில் நுழையும்போது விஜய், அஜித்தின் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவராக நடித்தாலே போதும் என்ற எண்ணத்துடன் சினிமாவுக்கு வந்ததாக கூறியுள்ளார்.


 
 
சமீபத்தில் நடந்த கல்லூரி விழா ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், ' டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தபோது பெரிய ஹீரோவாகும் எண்ணம் எல்லாம் இல்லை. விஜய், அஜித் போன்ற ஹீரோக்களின் நண்பர்களில் ஒருவராக நடித்தாலே போதும் என்றுதான் நினைத்தேன். ஆனால் எனக்கு கிடைத்த டீம் நல்ல டீமாக இருந்தது. பாண்டியராஜ், தனுஷ் ஆகியோர் எனக்கு நல்ல வாய்ப்பு கொடுத்து என்னை ஹீரோவாக்கினார்கள்
 
இவங்கள மாதிரியானவங்க கொடுத்த நம்பிக்கையில் தான் இன்று ஹீரோவாக உள்ளேன். இப்போது யார் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தாலும் இவர் சிவகார்த்திகேயன் போல வந்துடுவார் என்று கூறும்போது மகிழ்ச்சியாக உள்ளது' என்று சிவகார்த்திகேயன் அந்த விழாவில் பேசினார்.
 
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துபவர்கள் அனைவரும் வாழ்க்கையில் முன்னேறிவிடுவார்கள். அதுபோல் அனைவரும் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்துங்கள், முன்னேறுங்கள். வெற்றிக்கு முக்கிய காரணம், யார் பேச்சையும் கேட்காதீங்க. உங்க மனசுக்கு என்ன தோணுதோ அதை செய்யுங்கள்' என்று அவர் மேலும் இந்த விழாவில் பேசினார்.
 

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :