புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 16 செப்டம்பர் 2017 (00:35 IST)

முதன்முதலாக விஜய்யுடன் இணைந்தார் ஜெயம் ரவி

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது போலவே ஜெயம் ரவி நடித்து வரும் 'டிக் டிக் டிக்' படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த நிலையில் தற்செயலாக இருவரது படங்களுக்கும் ஒரு ஒற்றுமை நிகழ்ந்துள்ளது.



 
 
ஆம், ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை 'விஜய்யின் 'மெர்சல்' படத்தை தயாரிக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதுவொரு அபூர்வ ஒற்றுமையாக கருதப்படுகிறது
 
ஜெயம் ரவி, ஆரோன் அஜிஸ், நிவேதா, ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்செண்ட் அசோகன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ப்ரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தை ஹித்தீஷ் ஜெபக் தயாரித்து வருகிறார். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.