திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 ஜூன் 2018 (12:10 IST)

மீண்டும் போராட்டத்தில் குதித்தார் ஸ்ரீரெட்டி: தெலுங்கு திரையுலகில் பரபரப்பு

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, நடிகர் சங்க உறுப்பினர் அட்டை கேட்டு மீண்டும் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, நடிகைகளை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று பிரபல இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது குற்றம்சாட்டினார். தெலுங்கு திரை அலுவலகம் முன்பு ஆடைகளை கழற்றி அரை நிர்வாண போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
 
இதனால் தெலுங்கு நடிகர் சங்கம் அவருக்கு நடிக்க தடை விதித்தது. ஸ்ரீரெட்டிக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையம் 20 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இதற்கிடையே ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பும் களம் இறங்கியது. இதனையடுத்து, தெலுங்கு நடிகர் சங்கம் அவர் மீதான தடையை நீக்குவதாக  அறிவித்தது. 
 
இந்நிலையில், ஸ்ரீரெட்டி தனக்கு நடிகர் சங்க உறுப்பினர் அட்டை வழங்க வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.