திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : திங்கள், 18 ஜூன் 2018 (21:06 IST)

விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகளின் மொத்த லிஸ்டும் என்கிட்ட இருக்கு - மிரட்டும் ஸ்ரீரெட்டி

அமெரிக்காவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகளின் மொத்த லிஸ்டும் என்கிட்ட இருக்கு என தெலுங்கு திரையுலகில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு படத் தயாரிப்பாளர் கிஷன் மற்றும் அவரின் மனைவி சந்திரா ஆகியோர் கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருமாறு அமெரிக்காவுக்கு அழைத்து தெலுங்கு நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதற்காக அவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு முக்கிய டைரியை கைப்பற்றினர். அதில் சில பிரபலமான நடிகைகளில் பெயர்களும் இருந்தனவாம்.
 
இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ஸ்ரீரெட்டி, அமெரிக்காவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகளின் ஜாதகமே என்னிடம் உள்ளது. 
 
அந்த லிஸ்டை நான் வெளியிட்டால் பூகம்பமே வரும். ஏனென்றால் அதில் பலர் பிரபலமான நடிகைகள், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் தான் எனக் கூறியுள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த் லிஸ்டில் யாரெல்லாம் சிக்கப்போகிறார்களோ என சமூகவலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.