1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 17 ஜூன் 2018 (16:12 IST)

மக்களின் போராட்டத்தை தடுக்க போலீஸின் புது ஐடியா!

தமிழகத்தில் நடக்கும் எல்லா போராட்டங்களையும் வீடியோ பதிவு செய்ய காவல்துறையினருக்கு டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்து போலீஸ் நடித்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
 
போராட்டத்தை அடக்க துப்பாக்கிச் சூடுதான் நடத்த வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து போராட்டக்காரர்களை தொடக்கத்திலே கண்டறிந்து ஒடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட உள்ளனர்.
 
அதன்படி தமிழகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போராட்டங்களை வளர விட வேண்டாம் என்று என அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
போராட்டங்களை காவல்துறையினர் வீடியோ பதிவு செய்வதால் மக்கள் பயத்தில் போராட்டத்திற்கு வர மாட்டார்கள் என்ற நோக்கத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.