1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 21 டிசம்பர் 2018 (20:50 IST)

ஒரு படத்துகே இந்த அலப்பரையா...? சம்பளத்தை கூட்டும் சாய் பல்லவி

தனுஷ், சாய் பல்லவி, ரோபோ சங்கர், நடிப்பில் இன்று மாரி 2 படம் இன்று வெளியாகி உள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் சாய் பல்லவி செம்ம ஹேப்பியாக இருக்கிறார். 
 
சாய் பல்லவி படத்தை பார்த்துவிட்டு அளித்த பேட்டியில், இதுதான் எனக்கு தமிழில் முதல் ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஷோ. பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கேன் என தெரிவித்தார். 
 
மாரி 2 படத்தை தொடர்ந்து சாய் பல்லவி நடிப்பில் சூர்யாவின் என்.ஜி.கே வெளியாக இருக்கிறது. இந்த படமும் வெற்றியடையும் என்ற எண்ணத்தின் சாய்பல்லவி தன்னை தேடிவரும் தயாரிப்பாளர்களிடம் பெரிய தொகையை சம்பளமாக கேட்கிறாராம். 
 
மாரி 2 படத்தில் அவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு மகிழ்ச்சி அடையாலாம் ஓகே. ஆனா, உடனே சம்பளத்தை அதிகரிப்பது எல்லாம் கொஞ்சம் ஓவர்.