வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 21 டிசம்பர் 2018 (15:22 IST)

சாய் பல்லவி செம்ம ஹேப்பி!

தனுஷ், சாய் பல்லவி, ரோபோ சங்கர், நடிப்பில் இன்று  'மாரி 2' படம் இன்று வெளியாகி உள்ளது. 


 
இந்த படத்தின் சிறப்பு காட்சி, அதிகாலை 5 மணிக்கு சென்னை காசி திரையரங்கில் வெளியானது. இந்த முதல் காட்சியை நடிகை சாய் பல்லவி, ரோபோ ஷங்கர், நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஏராளமான திரைபிரபலங்கள் ரசிகர்களோடு கண்டுகளித்தனர். 
 
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு சாய்பல்லவி அளித்த பேட்டியில்,  " இதுதான் எனக்கு தமிழில் முதல் ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஷோ. பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.  நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கேன். 
 
இப்படம் குறித்து நடிகர் ஸ்ரீகாந்த் பேசுகையில், இது ஒரு கமர்ஷியல் மாஸ் எண்டெர்டெயினர். ரொம்ப நல்லா இருந்தது. தனுஷ் கலக்கி விட்டார் என்றார்.
 
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் சாய் பல்லவி செம்ம ஹேப்பியாக இருக்கிறார். அவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. .