1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 20 டிசம்பர் 2018 (21:37 IST)

மற்றவர்கள் நடிக்க தயங்கும் வேடத்தில் சாய் பல்லவி? ரசிகர்கள் அதிர்ச்சி

பிரேமம் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் சாய் பல்லவி. அந்த படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தார் சாய்பல்லவி. 



அதன் பிறகு அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையிலும் தனது கதாபாத்திரம் மிக அழுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தார். அதன்படியே தனக்கான படங்களை தேர்வு செய்து நடித்தார். சாய்பல்லவி நடித்த எல்லா படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது. தமிழில் தனுசுடன் மாரி 2 படத்தில் நடித்துள்ளார் . இதில் ஆட்டோ ஓட்டுனராக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்தக் கதாபாத்திரம் சாய்பல்லவி தமிழகத்தில் நிலைநிறுத்திக்கொள்ள உதவும் என கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து அவர் தெலுங்கில் ராணாவுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இது சாய் பல்லவி நக்சலைட் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
காவல் அதிகாரிக்கும், பெண் நக்சலைட்டுக்கும் மலரும் காதலை மையப்படுத்தி எடுக்கின்றனர். அதிரடி சண்டை காட்சிகளும், அரசியலும் படத்தில் உள்ளன. நக்சலைட்டாக நடிப்பதற்கு விமர்சனங்களும் கிளம்பி உள்ளன. கதாநாயகியாக வளர்ந்து வரும் நிலையில் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதை சக நடிகைகளும், ரசிகர்களும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.  கதை பிடித்திருந்ததால் சாய் பல்லவி இந்த வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.