வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: சனி, 13 ஜனவரி 2018 (11:44 IST)

நமீதா படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடித்துள்ள ‘பொட்டு’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
‘செளகார்பேட்டை’ படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் ‘பொட்டு’. பரத் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே என 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
 
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, இரண்டு மொழிகளிலுமே யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்யத்  திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தில் பெண் வேடமிட்டு நடித்துள்ளார் பரத்.
 
தம்பி ராமையா, பரணி, ‘மொட்டை’ ராஜேந்திரன், ஊர்வசி, மன்சூர் அலிகான், ‘லொள்ளு சபா’ சாமிநாதன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப்  படத்தில் நடித்துள்ளது.