1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : திங்கள், 18 செப்டம்பர் 2017 (22:06 IST)

ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘ஸ்பைடர்’ படத்துக்கு, தெலுங்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.


 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம், வருகிற 29ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

இந்தப் படத்தைப் பார்த்த தெலுங்கு சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். தமிழில் என்ன சான்றிதழ் கிடைக்கப் போகிறது எனத் தெரியவில்லை. இந்தப் படம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் ஓடும்.