ஜி.வி.பிரகாஷ் படத்தில் இருந்து லாவண்யா திடீர் நீக்கம் ஏன்?


sivalingam| Last Modified செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (22:50 IST)
ஜி.வி.பிரகாஷ், லாவண்யா திரிபாதி நடிக்கும் '100% காதல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் திடீரென நாயகி லாவண்யா இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார். 


 
 
இந்த படத்தின் காட்சிகளை எடுத்துவரை போட்டு பார்த்த படக்குழுவினர் ஜி.வி.பிரகாஷூக்கு பொருத்தமான ஜோடியாக லாவண்யா இல்லை  என்றும், அவருக்கு அக்கா போல் இருப்பதால் நாயகியை மாற்ற வேண்டும் என்றும் பேச்சு அடிபட்டது.
 
ஏற்கனவே இந்த படத்தில் நடிக்க அரைமனதுடன் ஏற்றுக்கொண்ட லாவண்யா இப்படி ஒரு பேச்சு வந்தவுடன் தானாக முன்வந்து இந்த படத்தில் இருந்து விலகி கொள்வதாக கூறிவிட்டாராம்
 
தற்போது 'அர்ஜூன் ரெட்டி' நாயகி ஷாலினி பாண்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் அறிமுகமாகும் முதல் தமிழ்ப்படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :