யாருக்குமே தெரியாத விஷயம் ஊருக்கே எப்படி தெரிந்தது ராகவா லாரன்ஸ்?


sivalingam| Last Modified செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (22:26 IST)
இளையதளபதி விஜய் நேற்று அனிதாவின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறியதோடு ஒரு தொகையையும் அனிதாவின் தந்தையிடம் கொடுத்ததாகவும், அந்த தொகை எவ்வளவு என்று யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று விஜய் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இப்பொழுதுவரை விஜய் எவ்வளவு கொடுத்தார் என்பது யாருக்கும் தெரியாது. ஒருசில ஊடகங்கள் ஒரு ஊகத்தில்தான் ரூ.1 லட்சம் என செய்தி வெளியிட்டுள்ளன


 
 
இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் சத்தமே இல்லாமல் விஜய் செல்வதற்கு முந்தைய நாள் அனிதாவின் வீட்டிற்கு சென்றதாகவும், அனிதா குடும்பத்தினர்களுக்கு அவர் ரூ.15 லட்சம் கொடுத்துவிட்டு, யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
 
ஆனால் ராகவா லாரன்ஸ் சென்னை வந்து சேர்வதற்குள் அவர் ரூ.15 லட்சம் அனிதா குடும்பத்தினர்களுக்கு கொடுத்ததாக பல ஊடகங்களில் செய்தி வெளியானது. பணம் கொடுத்த விவகாரம் ராகவா மற்றும் அனிதா குடும்பத்தினர்களுக்கு மட்டுமே தெரியும் என்று கூறப்படும் நிலையில் ஊடகங்களுக்கு சொன்னது யார்? என்பதை கண்டுபிடிக்க சிபிஐ வேண்டுமா என்ன? இந்த விளம்பரப்பிரியர்கள் எப்போது திருந்துவார்கள்?

webdunia

இதில் மேலும் படிக்கவும் :