'களவாணி 2' எப்போது ரிலீஸ்! முக்கிய அறிவிப்பு

kalavani
VM| Last Updated: செவ்வாய், 15 ஜனவரி 2019 (09:53 IST)
களவாணி 2' திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்பது உறுதியாக உள்ளது. 


சற்குணம் இயக்கத்தில் விமல் ஓவியா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் களவாணி.  நடிகர்களின் படங்கள் மட்டுமே வெற்றி பெற்று வந்த அந்த சமயத்தில் அறிமுக நடிகரான விமலின் களவாணி பொது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.  ஓவியா ,விமல் நடிப்பு படத்தில் பெரிதும் பாராட்டப்பட்டது. பெரிய அளவில் எந்த விளம்பரமும் இல்லாமல் வெற்றிக்கொடி நாட்டிய இப்படத்தின் இரண்டாம் பாகமாக களவாணி 2 தற்போது தயாராகி வருகிறது.

சற்குணம் இயக்கும் இப்படத்தில் விமல் , ஓவியா மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். வரும் பிப்ரவரி மாதம் இப்படம் வெளியாகும் என்பது இன்று வெளியாகியுள்ள பேப்பர் விளம்பரத்தில் தெரியவந்துள்ளது. 
 


இதில் மேலும் படிக்கவும் :